சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை சேர்ந்தவர் சரவணன். மனநலம் பாதிக்கப்பட்ட சரவணன் சிகிச்சைக்காக காளையார்கோயில் அரசு மருத்துவமனையில் நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்று சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இன்று நோய் முற்றிய நிலையில் இன்று காளையார்கோயில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த சரவணனுக்கு சிகிச்சை அளிக்க மனநல மருத்துவர் இல்லாததால் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நோய் முற்றிய நிலையில், சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆம்புலன்ஸில் இருந்து இறங்க மறுத்தவர், அங்கிருந்த இரும்பு கம்பிகளின் மீது குரங்கு போல் ஏறி ஆவேசமாக கத்தியபடி வித்தை காட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த நோயாளிகள் மற்றும் உறவினர்கள் சிதறி ஓடினர். பாதுகாப்பு பணியில் காவலர்கள் இல்லாத நிலையில், மருத்துவமனை பாதுகாவலர்கள் சரவணனை கீழே இறக்க முயற்சித்தனர். அப்போது பாதுகாவலர்களை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பாதுகாவலர்கள் சூழ்ந்து கொண்டு அவர் கைகளை கட்டி சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதனால் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை செல்போனின் பதிவிட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.