தேனி மாவட்ட ஆட்சியர் திட்ட வளாகத்தில் அருகிலுள்ள மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் .

அப்போது அவர்கள் தமிழ்நாடு முழுவதும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் கடுமையான பணி சுமையிலும் புதிய திட்டங்களுக்கு புதிய பணியிடங்கள் ஏற்படுத்தாத காரணத்தால் மன அழுத்தத்திலும் பணிபுரிந்து வருவதாகவும்
பணி மாறுதல் வழங்கும்போது ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து ஆணை பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருவதை கைவிட வேண்டும் ,.
உங்களுடன் ஸ்டாலின் முகாம் 108 நடத்த திட்டமிட்ட நிலையில் 69 க்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு வரப்பட்டுள்ளது

மீதம் உள்ள 39 க்கான நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்களை கால அவகாசம் கொடுக்காமல் முடிவு செய்ய கோருவதையும், கூடுதலாக மனுக்களை பெற நிர்பந்திக்கும் நடைமுறையை கைவிட கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் பா. ஜெகதீசன், மாவட்டச் செயலாளர் சு.தாமோதரன் தலைமை தாங்கினர் ..