ஸ்ரீமத் விஷ்வலிங்க தம்பிரான் என்பவர் 218 ஜூலை மாதம் முதல் 292 வது ஆதினமான குருமாக சன்னிதானத்தின் கரங்களால் தீக்சை பெற்று தம்பிரான் சாமியாக சேவை செய்து வருவதாகவும், 2021 ஆம் வருடம் குரு மகா சன்னிதானம் மகா சித்தி அடைந்த பிறகு, தற்போதுள்ள 293 வது குருமா சன்னிதானம் அவர்களிடத்தில் தம்பிரான் சாமியாக தொடர்ந்து பணியாற்றியதாகவும், 292 ஆவது குரு மகாசன்னிதானம் விருப்பப்படி தான் அடுத்த வாரிசாக வரவேண்டும்

ஆனால் தற்போதுள்ள 293 ஆவது ஆதினம், 292 ஆவரு குருமகா சன்னிதானம் மற்றும் தரும்புர ஆதினத்தின் கட்டளையை நிறைவேற்றாமல் வேறு ஒருவருக்கு பட்டம் சூட்ட திட்டமிட்டுள்ளார் என கூறியும், எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும், தருமபுரம் ஆதீனத்தின் ஆலோசனைப்படி நடக்க வேண்டும் எனவும், 293 வது குருமா சன்னிதானம் தருமபுரம் ஆதீனத்துடன் ஆலோசனை செய்து 292 வது குரு மகா சன்னிதானத்தின் விருப்பத்தை நிறைவேற்ற கோரி ஸ்ரீமத் விசுவலிங்க தம்பிரான் என்பவர் முனிச்சாலை பகுதியில் உள்ள 292 ஆவது குருமகா சன்னிதானத்தின் சமாதியின் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீமத் விஷ்வலிங்க தம்பிரானை காவல்துறையினர் பேச்சுவார்த்தைக்காக அழைத்து சென்றனர்.




