• Tue. Sep 16th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

சிந்தூர் மூவர்ணக் கொடி பேரணி..,

ByKalamegam Viswanathan

May 30, 2025

மதுரை கிழக்கு மாவட்டம் சோழவந்தான் தொகுதி பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஆப்ரேஷன்சிந்தூர் மூவர்ண கொடி வெற்றி கொண்டாட்ட பேரணி நடைபெற்றது.

வாடிப்பட்டி வல்லப கண பதி கோவிலில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக வந்து தாதம்பட்டி நீரேத்தான் இரட்டை விநாயகர் கோவிலை அடைந்தது.
இந்த பேரணிக்கு மாவட்ட துணைத் தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் அலங்கை பொன்குமார், மாவட்ட நிர்வாகிகள் ஜெயபாண்டி, வழக்கறிஞர் கார்த்திகேயன்,ரவிசங்கர் முருகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மண்டல் தலைவர் மாயகிருஷ்ணன் வரவேற்றார். பேரணியை
தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிவேல்சாமி தொடங்கி வைத்தார்.

பேரணியில் முன்னாள் ராணுவ வீரர்கள் அசோக்குமார் பழனிச்சாமி, ராஜாராம்,
மாவட்ட இளைஞரணி தலைவர் சிவராமன், கட்சி நிர்வாகிகள் சசிகுமார், தர்மர், வழக்கறிஞர் விஜயகுமார், கதிர்வேல் ,இருளப்பன்,காட்டு ராஜா, முத்துப்பாண்டி அனுசியா, தே.மு.தி.க பேரூர் செயலாளர் பாலாஜி தலைமையில் முன்னாள் பேரூர் செயலாளர்கள் மாரியப்பன் ஜெயராஜ், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் கிருஷ்ணன், வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் வெங்கடசாமி, பேரூர் துணைச் செயலாளர் முருகன் பேரூர் நிர்வாகிகள் சங்கு பாண்டி செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாணவி பிரதீபா பாரதமாதா வேடம் அணிந்து நடந்து வந்தார். அவருக்கு மலர் தூவிகோஷங்கள் எழுப்பப்பட்டது. முடிவில் பொதுச் செயலாளர் ஜெயபால் நன்றி கூறினார்.