ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் பக்தர் காணிக்கையாக வழங்கிய வெள்ளி ஜடாரி நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தென் திருப்பதி என அழைக்கப்படும் சீனிவாச பெருமாள் கோவிலில் பக்தர்கள் பெருமாளை சுவாமி தரிசனம் செய்யும் போது ஜடாதி (பெருமாள் திருவடி) சேவை அளிக்கப்படுகிறது. கோயிலில் பயன்படுத்தி வந்த ஜடாரி சேதமடைந்ததை அடுத்து, பக்தர் ஒருவர் பெருமாளுக்கு வெள்ளி ஜடாரியை காணிக்கையாக வழங்கினார். நேற்று வெள்ளி ஜடாரிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சீனிவாச பெருமாள் சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பெருமாள் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இந்த வெள்ளி ஜடாரியில் திருவடி சேவை அளிக்கப்படும்.


இதில் ரகு பட்டர், பாலாஜி பட்டர் உள்ளிட்ட கோயில் அர்ச்சகர்கள் மற்றும் அறநிலையத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




