• Fri. Jul 3rd, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

கைப்பிடி சுவரை சரி செய்ய கையெழுத்து இயக்கம்

ByN.Ravi

Aug 8, 2024

மதுரையில் தெற்குவாசல் மேம்பால கைப்பிடி சுவற்றினை சரி செய்ய மார்க்லிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
மதுரை தெற்கு வாசல் விமான நிலைய சாலையில் என். எம். ஆர். சுப்புராமன் பாலத்தின்சுவர் சிதலடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால், விபத்து ஏற்படு முன்னரே சீரமைத்த நெடுஞ்சாலைத்துறை, மதுரை மாவட்ட நிர்வாகத்திடம் பல்வேறு முறை கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனை கண்டித்து, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி மத்திய 2-ம் பகுதி சார்பில் நடை பெற்ற கையெழுத்து இயக்கத்தில்தெற்குப்பகுதி குழு சேனல் லெனின் மத்திய பகுதிகளின் ஜீவா மாவட்ட குழு உறுப்பினர் கோபிநாத்மாதர் சங்க பொருளாளர் சாந்தி
தெற்கு கமிட்டி உறுப்பினர் பாண்டியராஜன், கண்ணன், ஜீவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தெற்கு வாசல் என். எம். ஆர். சுப்பு ராமன் பாலத்தில், பழுதடைந்த கைப்பிடியை விரைந்து சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கையெழுத்து இயக்கப் போராட்டம் நடைபெற்றது.
இதில், ஏராளமான பொதுமக்கள்கலந்து கொண்டு கையெழுத்திட்டனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று விரைவாக தெற்கு வாசல் மேம்பால சுவற்றினை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.