வேதாரண்யம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேதாரண்யம் நகரம், வேதாரண்யம் தெற்கு, வேதாரண்யம் வடக்கு, தலைஞாயிறு ஒன்றியங்களில் மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.


நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் வேதாரண்யம் நகரத்தில் மும்மொழிக் கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம் நாகை பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் வைரமுத்து தலைமையில், மாவட்ட தலைவர் விஜேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுமக்கள், வியாபாரிகள், மகளிர் உள்ளிட்ட பிஜேபி நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.
