• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கையெழுத்து முகாம்

Byகுமார்

Jun 25, 2022

மதுரையில் உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பீஸ் மதுபோதை நல சிகிச்சை மையம் மற்றும் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு இணைந்து நடத்திய கையெழுத்து முகாம் அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்றது
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டுபொதுமக்கள்இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மதுரை பீஸ் மது போதை மனநலம் சிகிச்சை மையம் மற்றும் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவுஇணைந்து கையெழுத்து முகாம் நடத்தியது. இந்த கையெழுத்து முகாமினை பீஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் சரவணன் தலைமையில் மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணிகிறிஸ்டோபர் கையெழுத்திட்டு தொடங்கிவைத்தார். இந்த கையெழுத்து முகாமில் மாணவர்கள் மாணவிகள் ஆர்வமுடன் கையெழுத்து இட்டனர் .இந்த முகாமில் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் துறையினர் கலந்து கொண்டனர்


பின்னர் செய்தியாளர் சந்திப்பில் கல்லூரி முதல்வர் தவமணிகிறிஸ்டோபர் கூறியது ஜூன் 26ம்தேதி போதை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை உண்டாக்கும் விதமாக கல்லூரி வளாகத்தில் கையெழுத்து முகாம் நடைபெற்றது இன்றைய மாணவர்கள் பலவிதமான போதைக்கு அடிமையாகி அவர்களது எதிர்காலத்தை சீரழித்துக் கொண்டிருக்கின்றன இந்த போதை விழிப்புணர்வு செயல்பாட்டினை அமெரிக்கன் கல்லூரி சார்பாக வரவேற்கிறேன் தொடர்ந்து மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனக் கூறினார்.