மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கல்யாணிபட்டி கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை அதே ஊரைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன் தடுப்புகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்து அடைத்தாக கூறப்படுகிறது.,

நத்தம் புறம்போக்கு பகுதியான இந்த பாதை அமைந்துள்ள பகுதியின் வழியாக 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தினசரி அன்றாட பணிகளுக்கும், பள்ளி மாணவ மாணவிகளும் இந்த பாதையை பொதுப்பாதையாக பயன்படுத்தி வந்தாக கூறப்படுகிறது., இந்நிலையில் இந்த பாதையை ஆக்கிரமிப்பு செய்து அடைத்ததால் வீடுகளுக்கு செல்ல வழி இல்லாது கிராம மக்கள் அவதியுற்று வருவதாக கூறி கடந்த வாரம் உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.,
இந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டி இன்று பெண்கள் உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் பெட்ரோல் கேன்களுடன் வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் பெண்களிடமிருந்து பெட்ரோல் கேன்களை பறிமுதல் செய்து, வருவாய் அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.,






