தலைநகர் சென்னையில் கார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இனி காரை பார்க்கிங் செய்வதற்கான இடம் இருக்கும் ஆவணத்தை காண்பித்தால் கார் வாங்க முடியும் என்கிற புதிய விதிமுறை வர இருக்கிறது.
தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் கார்களின் எண்ணிக்கை என்பது அதிகரித்து வருகிறது. இதில் பெரும்பாலும் கார் வாங்குபவர்களுக்கு பார்க்கிங் இடம் இருப்பதில்லை. இதன் காரணமாக தெருக்களில் மற்றும் சாலையோரங்களில் அவர்கள் கார்களை நிறுத்துகிறார்கள். இதனால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் இடையூறு ஏற்படுவதால் தற்போது பார்க்கிங் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதாவது கார் வாங்குபவர்கள் அவர்களுக்கு பார்க்கிங் இடம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து கழகம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. பார்க்கிங் இருப்பவர்கள் மட்டும்தான் இனி கார் வாங்க வேண்டும் என்று உத்தரவிடும் படி தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் அதன்படி ஒருவர் இனி எத்தனை கார்களை வாங்க விரும்புகிறாரோ அத்தனை கார்களுக்கும் பார்க்கிங் இடம் இருக்கும் ஆவணத்தை காண்பிக்க வேண்டும். இந்த புதிய உத்தரவு விரைவில் அமலாகும் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் இனி கார் வாங்க வேண்டுமா? : வருகிறது புதிய விதிமுறை
