கோவை மாவட்டத்தில், போதைப் பொருள் புழக்கத்தை தடுக்கும் வண்ணம் மாநகர மற்றும் மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கல்லூரி மாணவர்கள் தங்கி உள்ள தனியார் விடுதிகள், மற்றும் தனி அறைகளில் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த சோதனைகளில் போதை பொருட்கள் உள்ளிட்டவை கண்ட அறியப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி இன்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் செட்டிபாளையம் மற்றும் மதுக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட செட்டிப்பாளையம், மலுமிச்சம்பட்டி, கோவில்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 2 டி.எஸ்.பி, 10 காவல் ஆய்வாளர்கள், 400 காவலர்கள் அடங்கிய குழுவினர் கல்லூரி மாணவர்கள் தங்கி உள்ள தனியார் விடுதிகள் அறைகளில் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் குட்கா, கஞ்சா, கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த காவல் கண்காணிப்பாளர்,
இந்த சோதனையில் 13 பேரை பிடித்து உள்ளதாகவும், சந்தேகப்படும் நபர்கள் 55 பேரையும் பிடித்து உள்ளதாகவும், 6.3 கிலோ கஞ்சா 52 கிலோ குட்கா, 8 ஆயுதங்கள், போலியான பதிவு எண், முறையான ஆவணங்கள், பதிவு எண் இல்லாத, 46 இருசக்கர வாகனங்கள், மற்றும் 1 காரை பறிமுதல் செய்து உள்ளதாக தெரிவித்தார்.
Operation Clean Kovai என்ற திட்டத்தின் கீழ் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
குற்ற பின்னணி உள்ளவர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து கோவையில் அடைக்கலம் புகுவதாகவும், இந்த பகுதிகளில் போதை பொருட்கள் புழக்கம் அதிகமாக இருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையிலும் இந்த சோதனைகள் நடைபெற்றதாக தெரிவித்தார்.
தற்பொழுது பிடிக்கப்பட்டவர்களில் நான்கு பேர் மீது ஏற்கனவே கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு, கொள்ளை வழக்கு ஆகியவை இருப்பதாகவும், இந்த வழக்கில் சூடான் நாட்டை சார்ந்தவரும் இருப்பதாக தெரிவித்தார்.
விசாரணை முடிந்த பிறகு தான் போதை பொருட்கள் எங்கு ? இருந்து வந்தது. இதில் யார் ? யாரெல்லாம் ஈடுபட்டு உள்ளார்கள் என்பது பற்றி தெரியவரும் என்றும் மேற்கொண்டு கைது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
மேலும் இந்த சோதனையில் paytm போன்ற மின்னணு சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
கோவையை பொறுத்த வரை செட்டிபாளையம், மதுக்கரை, சூலூர், நீலாம்பூர், கே.ஜி சாவடி உள்ளிட்ட பகுதிகளில் தான் போதைப் பொருட்கள் புழக்கம் அதிகமாக இருப்பதாக கூறினார்.
இதில் கல்லூரியில் இருந்து இடை நிற்றல், செய்த மாணவர்களும் இருப்பதாக தெரிவித்த அவர். இது போன்று வழி தவறி செல்பவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி மீண்டும் படிப்பை தொடர்வது போன்றவற்றிற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
கொடுங் குற்றங்கள் செய்பவர்கள், கஞ்சா விற்பனையில் டீலர்கள் ஆக இருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.
இது குறித்தான விழிப்புணர்வை கல்லூரிகளிலும் விடுதிகளிலும் வழங்கி வருவதாக தெரிவித்தார்.
கிணத்துக்கடவு பகுதியில் ஒரு பள்ளியில் ஆசிரியர்கள் மீது எழுந்த பாலியல் புகார் குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர்
அந்த புகாரின் அடிப்படையில் நேற்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவினருடன் சேர்ந்து பள்ளி மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளதாகவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்த அவர், இரண்டு ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
இது போன்ற சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்..