• Mon. Feb 16th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

கல்யாணசுந்தரர் திருக்கோவிலில் சிவராத்திரி வழிபாடு..,

ByKalamegam Viswanathan

Feb 16, 2026

மதுரை அவனியாபுரத்தில் பாண்டிய மன்னர்கள் காலத்தை சேர்ந்த ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பால மீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் உள்ளது .

மிகவும் பழமையான வாய்ந்த கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு நான்கு கால பூஜைகள், யாக சாலை பூஜை ,அபிஷேக ஆராதனைகள் பக்தர்கள் விடிய விடிய திருவாசகம் தேவாரம் சிவபுராணம் உள்ளிட்ட பாடல்களை பாடி பூஜைகளில் கலந்துகொண்டனர்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி விடிய விடிய தரிசனம் செய்தனர் சிவராத்திரி சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாக அலுவலர் சங்கரேஸ்வரி அர்ச்சகர் நாகசுப்பிரமணியன் மற்றும் திருக்கோயில் அலுவலர்கள் சதீஷ்குமார் காளீஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.