• Fri. Jul 24th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

ரஜினிகாந்த்தை பின்னுக்குத் தள்ளிய ஷங்கர்- ராம்சரண் கூட்டணி

தமிழில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தை பிரச்னை காரணமாக பாதியிலேயே நிறுத்திவிட்டு தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் 15வது படத்தை இயக்கப் போய்விட்டார் ஷங்கர். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பூஜையுடன் ஆரம்பமாகி நடந்தது.

தற்போது கொரானோ தொற்று பரவல் காரணமாக படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படத்தைத் தயாரித்து வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இப்படத்தின் டிஜிட்டல் உரிமை மட்டும் 200 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக தெலுங்கு சினிமாவட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் நடித்துள்ள ‘ஆர்ஆர்ஆர்’ படம் வெளிவந்த பின் ராம்சரண் அகிலஇந்தியா நடிகராக ஆக உயரும் வாய்ப்புகள் அதிகம்.

அவருடைய அடுத்த படத்தின் இயக்குனர் ஷங்கர் என்பதால் அந்தப் படமும் பிரம்மாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஜீ 5 ஓடிடி நிறுவனம் சார்பில் டிஜிட்டல் உரிமை 200 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறதுஷங்கர், ரஜினிகாந்த் இணைந்த ‘2.0’ படத்தின் டிஜிட்டல் உரிமையை ஜீ 5 நிறுவனம் 110 கோடி கொடுத்து வாங்கியிருந்தது

தமிழில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தை பிரச்னை காரணமாக பாதியிலேயே நிறுத்திவிட்டு தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் 15வது படத்தை இயக்கப் போய்விட்டார் ஷங்கர். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பூஜையுடன் ஆரம்பமாகி நடந்தது.

தற்போது கொரானோ தொற்று பரவல் காரணமாக படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படத்தைத் தயாரித்து வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இப்படத்தின் டிஜிட்டல் உரிமை மட்டும் 200 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக தெலுங்கு சினிமாவட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் நடித்துள்ள ‘ஆர்ஆர்ஆர்’ படம் வெளிவந்த பின் ராம்சரண் அகிலஇந்தியா நடிகராக ஆக உயரும் வாய்ப்புகள் அதிகம்.

அவருடைய அடுத்த படத்தின் இயக்குனர் ஷங்கர் என்பதால் அந்தப் படமும் பிரம்மாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஜீ 5 ஓடிடி நிறுவனம் சார்பில் டிஜிட்டல் உரிமை 200 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறதுஷங்கர், ரஜினிகாந்த் இணைந்த ‘2.0’ படத்தின் டிஜிட்டல் உரிமையை ஜீ 5 நிறுவனம் 110 கோடி கொடுத்து வாங்கியிருந்தது.