• Sun. Sep 27th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

தெலுங்கில்வசூலை வாரிக்குவித்த தந்தை மகன் கூட்டணி

கல்யாண் கிருஷ்ணா இயக்கத்தில், நாகார்ஜுனா, அவரது மகன் நாக சைதன்யா, ரம்யா கிருஷ்ணன், கிர்த்தி ஷெட்டி மற்றும் பலர் நடித்து பொங்கலன்று வெளிவந்த தெலுங்குப் படம் ‘பங்கார்ராஜு’.

50 சதவீத இருக்கைகள் காரணமாக பல பெரிய தெலுங்குப் படங்களின் வெளியீடுகள் தள்ளி வைக்கப்பட்டது. குறிப்பாக ‘ஆர்ஆர்ஆர், ராதேஷ்யாம்’ ஆகிய படங்கள் வெளிவராததால் தியேட்டர்காரர்கள் எதிர்பார்த்த ஒரு படமாக ‘பங்கார்ராஜு’ படம் மட்டுமே இருந்தது. அவர்களது எதிர்பார்ப்பும் வீண் போகவில்லை.

கடந்த மூன்று நாட்களில் மட்டும் இப்படம் 50 கோடி வசூலைக் கடந்துள்ளதாக தெலுங்கு திரைப்பட வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாகார்ஜுனா, நாக சைதன்யா இருவரது நடிப்பும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளதாலும், போட்டிக்கு வேறு படங்கள் இல்லாத காரணத்தாலும் இந்தப் படம் தனித்து வெற்றி பெற்றுள்ளது.

இப்படத்தின் இயக்குனர் கல்யாண் கிருஷ்ணாவை உடனடியாக தங்களது அடுத்த படத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம்.