• Mon. Mar 2nd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

ஷங்கர் படத்தில் வில்லனாகும் மலையாள நடிகர்…

Byமதி

Oct 27, 2021

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் ‘ராம் சரண் 15’ படத்தில் நடிகர் சுரேஷ் கோபி வில்லனாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் ஷங்கர் தற்போது ‘ராம் சரண் 15’ படத்தை இயக்கி வருகிறார். ராம் சரண் இரட்டை கதாப்பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு நாயகியாக கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமன் இசையமைக்கும் இந்தப் படத்தை, பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். 170 கோடியில் இப்படம் உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தொடங்கியது.

இந்த நிலையில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘ஐ’ படத்தில் வில்லனாக நடித்திருந்த மலையாள நடிகர் சுரேஷ் கோபி, மீண்டும் இந்த படத்தில் இணைந்திருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. மீண்டும் வில்லனாகவே நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.