மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை அணைப்பட்டி மெயின் ரோட்டில் வேட்டார் குளம் அருகில் ஆதி மாசாணி அம்மன் கோவில் உள்ளது. இங்கு எட்டாம் ஆண்டு திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து திங்கட்கிழமை மயான பூஜை நடைபெற்றது செவ்வாய்க்கிழமை காலை வைகை ஆற்றில் இருந்து சக்தி கரகம் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் புடை சூழ எடுத்துவரப்பட்டது. தொடர்ந்து பூக்குழிக்காக கண் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது விழாவையொட்டி மாசாணி அம்மனுக்கு பால் தயிர் வெண்ணெய் மஞ்சள் பொடி மா பொடி உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அறுசுவை அன்னதானம் நடைபெற்றது .
இதில் குருவித்துறை மன்னாடிமங்கலம் காடுபட்டி சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து புதன்கிழமை பூக்குழி வைபவம் நடைபெறுகிறது.






