விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சி சின்ன காரியாபட்டி காமராஜர் காலணியில் அமைந்துள்ள சக்தி காளியம்மன் திருக்கோவில் 23ஆம் ஆண்டு புரட்டாசி திருவிழாவை முன்னிட்டு பால்குடம் அலகு குத்துதல் தீச்சட்டி உள்ளிட்ட நேர்த்திக்கடன் நிகழ்வுகள் நடைபெற்றன.

இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பால் தயிர் மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வகையான திரவிய பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.