• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ரசிகர்கள் வாழ்த்துகளுடன் ரம்ஜான் கொண்டாடிய ஷாருக்கான்

Byதன பாலன்

Apr 23, 2023

நாடு முழுவதும் இஸ்லாமியர்களால் ரம்ஜான் பண்டிகை உற்சாகமுடன் கொண்டாடப்பட்டது.
இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான ஷாருக்கான் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்.
இதனை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்க மும்பையில் உள்ள அவரது மன்னத் இல்லத்திற்கு வெளியே நேற்று காலையில் இருந்து ரசிகர்கள் குவிய தொடங்கினார்கள். தங்களது விருப்பத்திற்குரிய நடிகரை காண்பதற்காக மணிக்கணக்கில் காத்திருந்தனர். இதனை தொடர்ந்து, ரசிகர்களை பார்க்க நடிகர் ஷாருக் கான் வீட்டு பால்கனிக்கு வந்தார். வெண்ணிற டி-சர்ட் மற்றும் நீல நிற ஜீன்ஸ் என எளிய உடையில் தோன்றினார்.அவருடன் அவரது இளைய மகனான ஆபிராமும் இருந்தார். கூடியிருந்த கூட்டத்தினரை நோக்கி வழக்கம்போல் கையசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
நடிகர் ஷாருக் கான் ரம்ஜான் பண்டிகையின்போது, ஆண்டுதோறும் ரசிகர்களை சந்திக்கும் வழக்கம் வைத்து உள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராமில், இந்த பண்டிகை நாளில் உங்கள் அனைவரையும் காண்பது இனிமையாக உள்ளது. இந்த அன்பை பரவ செய்வோம். கடவுளின் ஆசிகள் நம் அனைவருடனும் இருக்கட்டும் ரம்ஜான் வாழ்த்துகள் என தெரிவித்து உள்ளார். அவரது இந்த பதிவுக்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்து உள்ளன