• Thu. Mar 12th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான்

நடிகர் ஷாரூக்கான், தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்துவருகிறார். அவரது ரெட் சில்லீஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கப்பட்ட நிலையில், ஷாரூக்கானின் மகன் ஆர்யன்கான் போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டார். இதனால், இப்படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. ஆர்யன் கான் ஜாமினில் வெளியில் வந்தவுடன் மீண்டும் படப்பிடிப்பு துவங்கியது. இந்தப் படத்தில் ஷாரூக்கானுக்கு நாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார்.இப்படத்திற்கு அடுத்ததாக சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோன் உள்ளிட்டோருடன் பதான் என்ற படத்தில் நடிக்கிறார். இதனையும் முடித்துவிட்டு ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஒரு படத்தில் ஷாரூக்கான் நடிக்கவுள்ளார். இப்படத்தில் விக்கி கவுஷன், டாப்ஸி, பொமான் ஹிரானி உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ராஜ்குமார் ஹிரானி இந்தியில் ‘முன்னாபாய் எம்பிபிஎஸ்’, ‘3 இடியட்ஸ்’, ‘பிகே’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது