• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நடிகராக களமிறங்கும் செந்திலின் மகன்..!

Byவிஷா

Jun 24, 2022

நடிகர் செந்தில் தமிழ் சினிமால் 40 ஆண்டுகளாக நடித்து வருகிறார். அதிமுக ஆதரவாளராகவும், பேச்சாளராகவும் பல தேர்தல்களில் செயல்பட்டுள்ளார். இந்நிலையில் சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த அவர் சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான “தானா சேந்த கூட்டம்” திரைப்படத்தின் மூலம் ரி எண்ட்ரி கொடுத்தார்.
அதன் பின்னர் இப்போது அவர் ‘ஒரு கிடாயின் மனு’ படத்தின் இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும் பல படங்களிலும் நடித்து வரும் அவர் பாபி சிம்ஹா கதாநாயகனாக நடிக்கும் ‘தடை உடை’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவரின் மகன் மருத்துவர் மணிகண்டபிரபு அவருக்கு மகனாகவே நடிக்கிறார். இதன் மூலம் செந்தில் குடும்பத்தில் இருந்து மற்றொரு கலைவாரிசு உருவாகியுள்ளது. செந்தில் தன் மகனோடு இருக்கும் படப்பிடிப்புத் தளப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.