• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மருத்துவ மையக் கட்டிடத்தை திறந்து வைத்த செந்தில் பாலாஜி..,

BySeenu

Sep 10, 2025

கே.எம்.சி.ஹெச் மருத்துவ கல்லூரி சார்பாக ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில்,பொதுமக்கள் பயன் பெறும் வகையில் மருத்துவ மையங்கள் துவங்கப்பட்டு வருகின்றன..

இந்நிலையில் ஆனைக்கட்டி சாலையில் உள்ள தடாகம் பகுதியில் துவங்கப்பட்டுள்ள புதிய ஊரக மருத்துவ மையக் கட்டிட துவக்க விழா கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி, தலைமையில் நடைபெற்றது..

இதில் மருத்துவமனையின் துணைத் தலைவர் டாக்டர் தவமணி தேவி பழனிசாமி மற்றும் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக முன்னாள் அமைச்சர் மற்றும் கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி. செந்தில் பாலாஜி கலந்து கொண்டு புதிய மருத்துவ மைய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இது குறித்து கே.எம்.சி.எச்.மருத்துவமனையின் தலைவர்,டாக்டர் நல்லா பழனிசாமி கூறுகையில், புதிதாக துவங்கப்பட்டுள்ள மருத்துவ மையத்தில் இரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, இரத்தத்தில் உப்பின் அளவு, கிரியாடினின், இரத்ததில் சர்க்கரை அளவு, பாப் ஸ்மியர் பரிசோதனை, இரத்த வகை, மலேரியா பாரசைட், மார்பு எக்ஸ்ரே, இசிஜி போன்ற அனைத்து பரிசோதனைகளும் இலவசமாக செய்யப்படுவதாக தெரிவித்தார்.

கிராமப்புற ஏழை எளிய மக்களின் நலன் காப்பதற்காக தடாகம் பகுதியில் உருவாக்கப்பட்ட கேஎம்சிஹெச் மருத்துவ கல்லூரி ஊரக மருத்துவ மையத்தினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.