டெல்லியில் இருந்து விமான மூலம் கோவை வரும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை வரவேற்பதற்காக முன்னாள் எம்பி சத்திய பாமா தலைமையில் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் கோவை விமான நிலையத்தில் திரண்டனர்.

அப்போது செய்தியாளர்கள் இடையே பேசிய சத்தியபாமா, எல்லாம் நல்லதே நடக்கும் என்றும் மக்களும் தொண்டர்களும் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள் அது நிறைவேறினால் சரி என்றும் கூறினார்.
டெல்லியில் எங்கு சென்றார் யாரை சந்தித்தார் என்பது குறித்து செங்கோட்டையன் தான் கூறுவார் என்று கூறிய அவரிடம் செங்கோட்டையனுக்கு ஆதரவளித்தவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு சில நேரங்களில் இது போன்ற சங்கடங்கள் வரத்தான் செய்யும் ஆனால் நல்லதே நடக்கும் என்றும் பதில் அளித்தார்.