• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வீடு சேதம் அடைந்ததை பார்வையிட்டு நிதி உதவி வழங்கிய செல்வகுமார்..,

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபா சத்திரம் ஒன்றியத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக மின்கம்பி அருந்து விழுந்ததில் வீடு இருந்து சேதம் அடைந்ததை சேது பாசத்தில அதிமுக ஒன்றிய செயலாளர் செல்வகுமார் மற்றும் கழக நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்து நிதி உதவி வழங்கினர்.

தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் மற்றும் பட்டுக்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட செயலாளர் CV.சேகர் அவர்களின் அறிவுறுத்தலின்படி தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள கெங்காதரபுரம் ஊராட்சியில் டிட்வா புயல் தாக்கியதில் காற்று மற்றும் கனமழை காரணமாக மின் கம்பி அறுந்து விழுந்ததில் பெரியசாமி என்பவருடைய வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்து விட்டது சேதமடைந்த வீட்டை சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் ரா.க செல்வகுமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்க்குஆறுதல் தெரிவித்து சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இழப்பிடுக்கான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி நிதி உதவி வழங்கினார்.

அவருடன் கழக நிர்வாகிகளாகிய மாவட்ட மருத்துவரணி செயலாளர் செல்வகுமார், பெரியசாமி , முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பெ.சி.செல்வநாதன், பிரபாகரன், செந்தில், தமிழ்செல்வன், நீலகண்டன்,வீரையன், சந்திரசேகர் மா.கணேசன், ராதாகிருஷ்ணன்,உமாமதிவாணன்,S.தாஸ்,ராமசந்திரன்,ஜெயராமன், பாலசுப்ரமணியன், அய்யாசாமி,M.பாலசுப்ரமணியன்,ராமன்,சிவ மாதவன்.சுரேஷ், சுந்தராஜன், குணசேகரன், ஜெயபால், ராம்குமார், மாணிக்கம், பெத்த பெருமாள் உடன் இருந்தனர்.