திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரம் பகுதியில் வசித்து வரும் லிங்கராஜ் என்பவர் பிரபல மூக்கு பொடி நிறுவனத்தின் பெயரில் போலியாக மூக்கு பொடி தயார் செய்து விற்பனை செய்து வந்துள்ளார்.

இதுகுறித்து ரகசிய தகவலின் பேரில் பல்லடம் போலீசார் லிங்கராஜ் வீட்டினை சோதனை செய்த போது பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாக மூக்கு பொடி தயார் செய்து விற்பனை செய்தது உறுதியானது. இதனையடுத்து லிங்கராஜை கைது செய்த போலீசார் போலியாக மூக்கு பொடி தயாரிக்க பயன்படுத்திய 30 ஆயிரம் மதிப்புள்ள இயந்திரங்கள் மற்றும் 250 கிலோ மூக்கு பொடியை போலீசார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.