சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள தனியார் மண்டபத்தில், தொழில் உணவுக்கான பெருந்துறை கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் செய்தியாளர்களை சந்தித்த போது, கூட்டுறவுத் துறையில்
தற்போது 2400 செயலர், மற்றும் கணக்கர் பணிகளுககு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கூட்டுறவுத் துறையில் படிப்படியாக காலிபணியிடங்கள் நிரப்பப்படும். என்றவர்,
பால் உற்பத்தியை பொறுத்தவரை பருவநிலை காலத்திற்கு ஏற்ப உற்பத்தி கூடும் குறையும்.
தமிழகத்தில் உற்பத்தி பெருக்கம் ஓரிரு மாதங்களில் சீரடையும் என்றும் அண்டை மாநிலங்களில் கால்நடைகளுக்கு ஏற்பட்ட தொற்றின் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதால் அங்கும் பால் பற்றாக்குறை இருந்து வருகிறது என்ற
அமைச்சர், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கும், நகர்ப்புற வங்கிகளுக்கும், பணியாளர்கள் தேர்வுக்கான விளம்பரம் அந்தந்த மாவட்டங்களின் வாயிலாக செய்யப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களும் ,
பதிவு செய்யாதவர்களும், இதில் கலந்து கொள்ளலாம் என அமைச்சர் கே ஆர். பெரியகருப்பன் தெரிவித்தார்.
