• Fri. Aug 14th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

சிவகங்கையில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்..!

ByG.Suresh

Nov 25, 2023
சிவகங்கையில் பூத் கமிட்டி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை, மகளிர் அணி கமிட்டி அமைப்பது தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் அதிமுக சார்பில்   சிவகங்கையில் பூத் கமிட்டி அமைத்தல் மற்றும் இளைஞர் இளம்பெண்கள் பாசறை மகளிர் அணி கமிட்டி அமைப்பது தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்  மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன் ஆடுயு தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டுபேசிய சிவகங்கை மாவட்ட பொறுப்பாளரும் கழக அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனிவாசன் கழக நிர்வாகிகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் கட்சி பணியாற்ற வேண்டும். அப்பொழுதான் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற எளிதாக இருக்கும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் மாற்று கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்தனர் அவர்களுக்கு மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். 
இந்நிகழ்ச்சியில் மாநில எம்ஜிஆர் மன்ற  செயலாளர் இளங்கோவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நாகராஜன்,  சிவகங்கை நகரச் செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் கோபி,  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.