பல்லடம் பகுதியில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு பேரிடம் விசாரணை செய்தனர். அப்போது முன்னுக்கு பின்னாக பதில் அளித்ததால் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் ராஜேஷ், மகேஸ்வரன், மகேந்திரன், சபரிநாதன் ஆகியோர் என்பது தெரிய வந்தது. மேலும், அவர்களிடமிருந்து 3 செல்போன் சுமார் இரண்டு பவுன் தங்கச் சங்கிலி 2 சக்கர வாகனம் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.



