• Mon. Jun 5th, 2023

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சீமான் வேண்டுகோள்

ByKalamegam Viswanathan

Apr 14, 2023

அதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதால் அதிமுகவில் உள்ளவர்கள் அனைவரும் புனிதர்கள் ஆகிவிட மாட்டார்கள்.;ஊழல் கட்சிகளோடு கூட்டணி கிடையாது என பேரறிவுப்பு விட வேண்டும் – அண்ணாமலைக்கு சீமான் வேண்டுகோள்.
அண்ணாமலை நேர்மையானவராக இருந்தால் அதிமுக சொத்து பட்டியலை தயவு செய்து வெளியிடுங்கள் நடவடிக்கை எடுங்கள்‌ -சீமான்.
மதுரை விமான நிலைய நுழைவாயிலில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து செய்தியாளர் சந்தித்து பேசினார்.
அப்போது., சாதிய ஏற்ற தாழ்வுகளை வைத்துக்கொண்டு சமூகம் மேம்பாடு சமூக முன்னேற்றம் எல்லாம் பேசுவது மலக்குளியின் மேலே போடும் மல்லிகை பந்தலுக்கு சமம் என்று அறிவுறுத்துகிறார்.
கோயில்களில் ஆடுகளைத் தான் பலியிடுகிறார்கள் தவிர சிங்கங்களை அல்ல என்கிறார் அப்படி சிலிர்த்து யெலும் சிங்கங்களாக, வீரம் கொண்டு பாய்கிற புலிகளாக நாம் சமூக மேம்பாட்டிற்காக பாடுபட வேண்டும் என்கிற உறுதியை தொடர்ச்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள். புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கருக்கு பெருமிதத்தோடு எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம்.
பாஜக அண்ணாமலை திமுக அமைச்சர்கள் ஊழல் பட்டியல் குறித்த கேள்விக்கு:
இதை நான் வரவேற்கிறேன். இது ஒன்றும் புதிது இல்லை. அவர்களுக்கு எவ்வளவு சொத்து உள்ளது எப்படி என்பது நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதால் அதிமுகவில் உள்ளவர்கள் அனைவரும் புனிதர்கள் ஆகிவிட மாட்டார்கள். அவர்களின் பட்டியலையும் வெளியிட வேண்டும்.
இரண்டு பக்கமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஊழல் கட்சிகளோடு கூட்டணி கிடையாது என பேரறிவுப்பு விட வேண்டும். தம்பி அண்ணாமலைக்கு நான் வைக்கும் வேண்டுகோள் இது அனைவருக்கும் தெரிந்த செய்தி என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்று பார்ப்போம். அதிமுகவின் ஊழலையும் வெளியிட்டு நடுநிலையாக இருக்க வேண்டும். அங்கு கூட்டணி வைத்து இருப்பதால் வாயை மூடி இருந்தால் ஊழல் செய்த கட்சியுடன் ஏன் கூட்டணி வைத்தீர்கள் என்று கேள்வி கேட்போம். அதற்காக நீங்கள் வெளியிட மாட்டீர்கள் நீங்கள் நேர்மையானவராக இருந்தால் அதிமுக சொத்து பட்டியலை தயவு செய்து வெளியிடுங்கள் நடவடிக்கை எடுங்கள்.
ஐந்து வயது குழந்தை பாலியல் சீண்டல் குறித்த கேள்விக்கு:
கலாஷேத்ராவில் கட்சியினர் கிடையாது மாணவிகள் வீதிக்கு வந்தனர் இதில் பச்ச குழந்தைக்கு பின்புலம் இல்லை செய்தவர் திமுகவை சேர்ந்தவர் என்பதால் கேட்க நாதி இல்லை. என்னைப் போன்றவர்கள் அழுத்தம் கொடுக்கிறோம் ஆனால் நடவடிக்கை எடுக்க வேண்டும். தன் சொந்த கட்சியை சேர்ந்தவனாக இருந்தாலும், சொந்தக்காரராக இருந்தாலும் சரியான பக்கம் நிற்க வேண்டும் அவன் தான் நேர்மையான ஆட்சியாளர். ஆட்சியாளர் உமர் அவர்கள் திருடியவன் கையை வெட்ட வேண்டும் என்கிறார் அவன் பசிக்காக திருடி இருந்தால் ஆட்சியாளன் கையை வெட்ட வேண்டும் என்கிறார். அவன்தான் நேர்மையான ஆட்சியாளன் அது இங்கு இல்லை.
சட்ட சபையில் ஐபிஎல் டிக்கெட் விவாதம் குறித்த கேள்விக்கு:
அவர்களை தேர்வு செய்தது யார். ஆபிரகாம் லிங்கன் என்ன சொல்கிறார் என்றால் மோசமான ஆட்சி நடைபெறுவதற்கு தலைவர்கள் காரணம் இல்லை அந்த தலைவர்களை தேர்வு செய்த மக்கள் தான் காரணம் என்கிறார். இந்த மாதிரி ஆட்களை சட்டசபைக்கு அனுப்பியது யார் எவ்வளவு பிரச்சினைகள் உள்ளது அதை விட்டுவிட்டு ஐபிஎல் பார்ப்பதற்கு அனுமதி கேட்கிறீர்கள் அது விளையாட்டா அல்லது சூதாட்டமா. வீரர்களை ஏலத்திற்கு எடுத்தால் அது விளையாட்டாக இருக்குமா. எதிரணியினர் 5 கோடி கொடுத்து சுமாராக விளையாடச் சொன்னால் அதையும் செய்வார்கள் அங்கு காசு தான் முக்கியம்.
திருமங்கலத்தில் ஓடும் பேருந்தில் இருந்து பெண் தற்கொலை குறித்த கேள்விக்கு:
“இந்த விவகாரத்தில் அரசு விரைந்து நடவடிக்கை எடுத்தால் தான் இது போன்ற சம்பவங்கள் அடுத்து நடைபெறாமல் இருக்கும்.
பல்வீர் சிங் பல்லை உடைத்து என் கட்சிப் பிள்ளைகளையே சித்திரவதை செய்துள்ளார் வெளிப்படையாக தெரிகிறது. ஸ்டெர்லைட் விவகாரத்தில் மனு கொடுக்க வந்தவர்கள் கலவரம் செய்வார்கள் என்று எப்படி கணித்தார்கள். ஸ்னைப்பர் எப்படி குறி வைத்து சுட்டார்கள் என்று அரசு கேள்வி கேட்க வேண்டும்.
நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை தாக்கல் செய்தார் அது என் கிடப்பில் போடப்பட்டுள்ளது. நேரடியாக நின்று மூன்று மணி நேரம் சாட்சி சொல்லி உள்ளேன். அதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது காவலர்கள் செய்தால் அனைத்துமே சரியா அதை நியாயப்படுத்தி பேசுவார்களா.பாராளுமன்ற தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *