• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தேனியில் விதை உற்பத்தி தொழில் நுட்ப பயிற்சி

கடமலைக்குண்டு அருகே விதை உற்பத்தி தொழில் நுட்ப பயிற்சி மற்றும் இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், கடமலைக்குண்டு அருகே உள்ள கரட்டுப்பட்டி காலனியில் பழங்குடியின விவசாயிகள் நல திட்டத்தின் கீழ் விதை உற்பத்தி தொழில் நுட்ப பயிற்சி மற்றும் இடுபொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விதை மையம் மற்றும் வேளாண் ஆராய்ச்சி நிலையம் வைகை அணை இணைந்து ஏற்பாடு செய்திருந்த ,பழங்குடியின விவசாயிகள் நலத்திட்ட இடுபொருள்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விதை மைய இயக்குனர் சந்திரசேகரன் தலைமை தாங்கி, இடு பொருள்களை வழங்கி, சிறப்புரையாற்றினார். கோயம்புத்தூர் விதை மைய பயிர் நோயியல் பிரிவு உதவி பேராசிரியர் ஆனந்த் வரவேற்று பேசினார்.கடமலைக்குண்டு ஊராட்சிமன்ற தலைவர் சந்திரா தங்கம் வாழ்த்திப் பேசினார் .

இந்நிகழ்ச்சியில் வைகை அணை வேளாண் ஆராய்ச்சி நிலைய இணைப் பேராசிரியர் முனைவர் மதன்மோகன் கலந்துகொண்டு விதை உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி பற்றி விளக்க உரையாற்றினார். பூச்சியியல் துறை கோயம்புத்தூர் முனைவர் அருள்பிரகாஷ் நன்றியுரையாற்றினார் .இதில் ஏராளமான பழங்குடியின விவசாயிகள் கலந்துகொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து அவர்களுக்கு இந்த சிறப்பு திட்டத்தின் கீழ் இடுபொருள்கள் வழங்கப்பட்டது.