• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தரமற்ற உணவு, கடைகளுக்கு சீல்:

ByN.Ravi

Feb 24, 2024

திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, கோவில் உள்வளாகத்தில் உள்ள அப்பளம், மிளகாய் பஜ்ஜி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், சுகாதாரமற்ற முறையில் பூஞ்சைகள் மற்றும் புழுக்களுடன் காலிபிளவர் மற்றும் திறந்த நிலையில் மசாலா பொடிகள் கெட்டுப்போன உருளைக்கிழங்கு, அழுகிய நிலையில், வெள்ளைப்பூண்டு, சுகாதாரமற்ற முறையில் இருப்பிடம் என ஆய்வில் தெரிய வர, மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரியிடம் மூன்று கடைகளை பூட்டி சீல் வைக்கும்படி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி உத்தரவிட்டனர்.