• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!

ByKalamegam Viswanathan

Oct 12, 2023
இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர் மூண்டு வரும் நிலையில், எஸ்.டி.பி.ஐ கட்சியினர் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை வடக்கு மாவட்டம் சார்பாக, கோரிப்பாளையம் பகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர், பாலஸ்தீனில் இஸ்ரேல் நிகழ்த்திவரும் அராஜக தாக்குதல் மற்றும் ஆக்கிரமிப்பை கண்டித்தும், பாலஸ்தீன் நாட்டுக்கு இந்தியாவின் ஆதரவை இந்தியா தொடர வேண்டும் என வலியுறுத்தியும், மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட பாலஸ்தீன் நாட்டை அராஜகமாக ஆக்கிரமிப்பு செய்யும் சியோனிச இஸ்ரேலின் நடவடிக்கையை ஐ.நாவும், உலக நாடுகளும் தடுத்து நிறுத்திட வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பிலால் தீன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் நஜ்மா பேகம் கண்டன உரை நிகழ்த்தினர். துணை தலைவர் ஜாபர் சுல்தான், பொதுச்செயலாளர் பகுர்தீன், தொகுதி தலைவர் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட  கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இஸ்ரேலின் அடாவடியை கண்டித்தும், பாலஸ்தீனர்களின் மண்ணைக் காக்கும் போராட்டத்தை ஆதரித்தும் கோஷம் எழுப்பினர். இறுதியாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.