விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் எ.கா.த.தர்மராஜா பெண்கள் கல்லூரியில் பள்ளி மற்றும் கல்லூரிய மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
கண்காட்சிக்கு கல்லூரி தாளாளர் எ.கே.டி கிருஷ்ணம ராஜு தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினர்களாக பெங்களூர் ஆர்பி டெக்னாலஜி தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் அய்யாசாமி மற்றும் கோயம்புத்தூர் ஜிடி ஸ்டெம் லேப் ரோபோடிக்ஸ் பயிற்சியாளர் ஜெகதீசன் கலந்து கொண்டு மாணவர்கள் அறிவியல் விஞ்ஞானிகளாக வளர வேண்டும் என்று சிறப்புரையாற்றினார்கள்.

இந்த அறிவியல் காட்சியில் சுற்றுச்சூழல்,கணித மாதிரி, கணினி அறிவியல்,புதிபிக்க கூடிய ஆற்றல் , மழைநீர் சேகரிப்பு,கழிவு மேலாண்மை, காலநிலை மாற்றம்,அர்டுயினோ மூலம் ஆட்டோமேஷன் போன்ற 300க்கும் மேற்பட்ட கண்காட்சிகள் இடம் பெற்றன.எ.கா.த.தர்மராஜா கல்வி குழுமங்களின் மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், கல்வி ஆலோசகர், நிர்வாக உறுப்பினர்கள் உள்பட 3000 பேர் கண்காட்சியை பார்வையிட்டனர்.வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழும் வழங்கப்பட்டன.

முதல்வர் லட்சுமி வரவேற்புரையாற்றினார்.இயற்பியல் துறை தலைவி ஜெனிபர் மற்றும் உதவி பேராசிரியர் ஜெகதீஸ்வரி அறிமுக உரையாற்றினர்கள்.
மாணவி சங்கீதா நன்றியுரை கூறினார்.













; ?>)
; ?>)
; ?>)