• Mon. Apr 13th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

புதுச்சேரியிலும் பள்ளிகள் திறப்பு

Byமதி

Dec 4, 2021

புதுச்சேரியில் வரும் 6-ஆம் தேதி முதல் 1 – 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் 8-ஆம் தேதியே புதுச்சேரியில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பள்ளிகள் திறப்பு திடீரென ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில் வரும் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. விருப்பப்படும் மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வந்தால் போதும் என்றும், மாணவர்களுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்புகள் நடைபெறும் எனவும் புதுச்சேரி கல்வித் துறை அமைச்சர்
நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.