• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கார் மோதி பள்ளி ஆசிரியர் பலி

ByKalamegam Viswanathan

Jan 23, 2024

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகில் உள்ள ராஜம்பாடியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் இவரது மனைவி பஞ்சவர்ணம்(56) இங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகின்றார். இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்தவுடன் வீட்டிற்கு திரும்பும் போது நடந்து சென்ற இவர் மீது மதுரை காமராஜர் பல்கலைக்கழக அலுவலர் குடியிருப்பில் வசிக்கும் அசோக்குமார் மகன் சஞ்சய்குமார்(23) ஓட்டி வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பஞ்சவர்ணம் பலியானர். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகமலை புதுக்கோட்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.