• Sun. May 5th, 2024

செல்போனினால் விளையும் தீமை உள்ளிட்ட விழிப்புணர்வு குறித்து, கலை நிகழ்ச்சிகள் மூலம் செய்து அசத்திய பள்ளி மாணவ, மாணவிகள்…

ByKalamegam Viswanathan

Jan 20, 2024

சமூக ஒற்றுமை , தேச ஒற்றுமை, பிளாஸ்டிக் தவிர்ப்பு, செல்போனினால் விளையும் தீமை உள்ளிட்ட விழிப்புணர்வு குறித்து , கலை நிகழ்ச்சிகள் மூலம் செய்து அசத்திய பள்ளி மாணவ மாணவிகள். (அதேபோன்று மிருதங்கம், வீணை, டிரம்ஸ் உள்ளிட்ட கலைகளிலும் பார்வையாளர்களை கவரும் வகையில் தாய், தந்தை பாடல் ஒலியுடன் செய்தனர்).

மதுரை மாவட்டம் திருநகரில் உள்ள சிஎஸ்ஆர் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது பள்ளி 35 - வது ஆண்டு விழாவின் போது, பல்வேறு விழிப்புணர்வு குறித்து கலை நிகழ்ச்சிகளை செய்து அசத்தினர். எல் கே ஜி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் சிறுவர், சிறுமிகள் ஒவ்வொரு விழிப்புணர்வு கருத்துக்களை நடன நாட்டியத்தின் மூலம் பார்வையாளர்களை கவரும் வண்ணம் செய்து அசத்தினர். தேச ஒற்றுமை குறித்தும், ராதா கிருஷ்ணா திருக்கல்யாணம் கிருஷ்ண லீலை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்ப்பு மற்றும் செல்போன்களால் விளையும் தீமைகள் குறித்தும், தாய், தந்தையரின் முக்கியத்துவம் உள்ளிட்ட பல விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை வெகுவாக செய்தனர்.

இதே போன்று படிப்பில் மட்டுமல்ல, மிருதங்கம், வீணை, ட்ரம்ஸ் உள்ளிட்ட கலைகளையும் தங்களுக்கு அத்துபடி என்பது போல் அக்கலையிலும் சிறந்து விளங்கும் வகையில் மாணவ, மாணவிகள் செய்து அசத்தினர். இதில் சிறந்த விழிப்புணர்வு கருத்துக்களை செய்து அசத்திய மாணவ, மாணவியருக்கு  பள்ளி நிறுவனர். சீதாலட்சுமி கோப்பையை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *