• Thu. Oct 8th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

பள்ளி மாணவர் மாயம் போலீஸ் விசாரணை..,

BySeenu

Oct 8, 2026

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எருதப்பன்பட்டியை சேர்ந்த நிர்மல் கண்ணன் என்பவரின் மகன் கௌதம் (வயது 14) இவர் தனியார் அய்யலூரில் தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி விடுமுறையை முன்னிட்டு கடந்த 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்தபோது மாயமானார்.

அவரது பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடி பள்ளி மாணவர் கௌதம் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் இதுகுறித்து ஏரியோடு போலீசில் அவரது தாயார் புகார் செய்தார்.

எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதா, சப் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாயமான பள்ளி மாணவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.