• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்தால் பள்ளிக்கு விடுமுறை

Byவிஷா

Apr 3, 2024

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், செம்மங்கரை அருகில் உள்ள பள்ளிக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை கூறைநாடு, செம்மங்குளம் பகுதிகளில் நேற்றிரவு 11 மணியளவில் சிறுத்தை ஒன்று நடமாடியுள்ளதாகத் தெரிகிறது. செம்மங்குளம் பகுதியில் சாலையில் சுமார் 10க்கும் மேற்பட்ட நாய்கள் ஒன்று சேர்ந்து சிறுத்தையை துரத்தி வந்துள்ளது அந்த பகுதிகளில் இருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊருக்குள் சிறுத்தை நடமாட்டம் இருக்கும் செய்தி அந்த பகுதி மக்களிடையே காட்டுத்தீ போல் பரவியது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், அந்த பகுதியில் நடத்திய சோதனையில், சிறுத்தையின் கால் தடம் இருந்ததை கண்டறிந்த முதல் கட்டமாக பொதுமக்களுக்கு, தங்களது வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ள்னார். சிறுத்தையைப் பிடிக்கும் முயற்சிகள் நடைப்பெற்று வருகின்றன.
சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், செம்மங்கரை அருகில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் அந்த பகுதியில் சிறுத்தையைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதே சமயம் ஊருக்குள் எங்கேயாவது சிறுத்தையைக் கண்டால், 9360889724 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.