
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 22 வயது இளைஞர் 17 வயது சிறுமியை பின் தொடர்ந்து சென்று ‘ஐ லவ் யூ’ என்று தன்னுடைய காதலை வெளிப்படுத்தியுள்ளார். இதனால், அந்த இளைஞர் மீது சிறுமியும் அவரது தாயாரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
காவல்துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கு மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி கல்பனா பாட்டீல் முன்பு விசாரணைக்கு வந்தது.
இதை விசாரித்த நீதிமன்றம், ஒரு நிகழ்வில் ஒருவரிடம் மற்றொருவர் ‘ஐ லவ் யூ’ என்று கூறுவது தன்னுடைய உணர்வுகளை நாகரீகமான முறையில் வெளிப்படுத்துவது. உள்நோக்கத்துடனும், பாதிக்கப்பட்டவருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து சென்று அவ்வாறு கூறுவதுதான் சட்டப்படி குற்றம். ஒருவரிடம் தங்களை காதலிப்பதாக கூறுவது குற்றமல்ல, அது தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம்தான்.
அந்த வகையில் குற்றம் சாட்டப்பட்டவர் உள்நோக்கத்துடனும், சிறுமியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், பாலியல் உள்நோக்கத்துடனும் அதை செய்துள்ளார் என்பதை நிரூபிக்கவில்லை என்று கூறி, குற்றம் சாட்டப்பட்ட இளைஞரை விடுவித்து உத்தரவிட்டார்.