• Sun. Dec 14th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இடைத்தேர்தலைப் புறக்கணிப்பது தவறானது – சசிகலா கருத்து

ByP.Kavitha Kumar

Jan 18, 2025

இடைத்தேர்தலைப் புறக்கணிப்பது தவறானது. மக்கள் மீது நம்பிக்கை வைத்து தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி கிடைக்கும்.என சசிகலா தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.பிப்ரவரி 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்தத் தேர்தலில் திமுகவும், நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகின்றன.

ஆனால், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தேர்தலைப் புறக்கணித்துள்ளது. பாஜக, தேமுதிக, தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகளும் போட்டியிடாமல் விலகின.

இந்த நிலையில், மக்கள் மீது நம்பிக்கை வைத்து தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி கிடைக்கும் என சசிகலா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர்
செய்தியாளர்களிடம் பேசியதாவது: இடைத்தேர்தலை புறக்கணிப்பது தவறானது. மக்கள் மீது நம்பிக்கை வைத்து தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி கிடைக்கும். இன்று திமுக. அரசாங்கம் வீண் செலவு செய்து கொண்டிருக்கிறது, உருப்படியாக எதையும் செய்வது இல்லை.

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை அவர்கள் செய்த அனைத்தையும் பாமர மக்களுக்குப் புரியும் வகையில் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் எனத் தெரிவித்தார்.