• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சசிகலா புஷ்பா படுக்கை அறையில் அரைகுறை ஆடையுடன் மர்மநபர்

பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினர் சசிகலா புஷ்பா வீட்டு படுக்கை அறையில் மர்ம நபர்களை தமக்கு தெரியாமல் அனுமதித்ததாக அவரது 2-வது கணவர் வழக்கறிஞர் ராமசாமி சென்னை போலீசில் புகார் செய்துள்ளார்.

அதிமுகவில் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்தவர் சசிகலா புஷ்பா. திமுக ராஜ்யசபா எம்.பி.திருச்சி சிவாவை டெல்லி விமான நிலையத்தில் கன்னத்தில் ஓங்கி அறைந்த பஞ்சாயத்தில் சிக்கியவர். பின்னர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தம்மை தாக்கியதாக ராஜ்யசபாவில் புகார் எழுப்பி பரபரப்பை கிளப்பியவர்.

ஜெயலலிதா மறைவுக்கு அதிமுகவில் அணிகள் மாறிக் கொண்டே இருந்தார் சசிகலா புஷ்பா. 2016-ம் ஆண்டு அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா புஷ்பா போட்டியிட முயற்சித்தார். இதற்காக அதிமுக தலைமை அலுவலகத்துக்கு மனு வாங்க சென்ற அவரது முதல் கணவர் லிங்கேஸ்வரன் கடுமையாக தாக்கப்பட்டார். இந்த விவகாரம் அப்போது தலைப்புச் செய்திகளானது.

பின்னர் அமைதியாக இருந்த சசிகலா புஷ்பா 2018-ல் வழக்கறிஞர் ராமசாமியை 2-வது திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் டெல்லியில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. சசிகலா புஷ்பா திருமணம் செய்து கொண்ட வழக்கறிஞர் ராமசாமி மீதும் தன்னை ஏற்கனவே திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக சத்யபிரியா என்ற பெண் புகார் கூறி நீதிமன்ற படிகளேறி அதுவும் பெரும் சர்ச்சையானது. ஒருகட்டத்தில் அதிமுகவில் இருந்து விலகிய சசிகலா புஷ்பா, பாஜகவில் இணைந்தார். பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். தமிழக பாஜக தலைவர் பதவிக்கும் சசிகலா புஷ்பா பெயர் செய்திகளில் அடிபட்டது.

இந்நிலையில் ஆன்லைன் மூலமாக சசிகலா புஷ்பா மீது அவரது 2-வது கணவர் வழக்கறிஞர் ராமசாமி போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஆஜராகிவிட்டு காரில் கடந்த 13-ந் தேதி எனது மகளுடன் சென்னை வந்தேன். சென்னை, ஜீவன் பீமா நகரிலுள்ள எனது வீட்டிற்கு வந்து கதவை தட்டினேன். அமுதா என்பவர் கதவைத் திறந்தார்.

எங்கள் வீட்டிற்குள் உணவு பொட்டலங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. ஆல்கஹால் வாடை வீசியது. படுக்கை அறையில் எனது மனைவி சசிகலா புஷ்பா படுத்து இருந்தார். மற்றொரு அறையில் உள்ள படுக்கை அறையில் அடையாளம் தெரியாத நபர் அரைகுறை ஆடையுடன் இருந்தார். நான் அதிர்ச்சியாகி அந்த நபரை செல்போனில் வீடியோ எடுத்தேன். அந்த நபரும் அமுதா என்பவரும் என்னை ஆபாசமாக திட்டி மிரட்டல் விடுத்தனர். எனவே அந்த நபர்கள் மீதும், கணவன் என்ற முறையில் எனக்கு தெரியாமல் அந்த நபர்களை வீட்டிற்குள் அனுமதித்த மனைவி சசிகலா புஷ்பா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வழக்கறிஞர் ராமசாமி புகாரில் தெரிவித்துள்ளார்.