தாம்பரத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, “சர்தார் @150 – ஒற்றுமை யாத்திரை” என்ற தலைப்பில் போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மாவட்ட இளைஞர் அணி தலைவர் செல்வ முத்துக்குமரன் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணிக்கு, செங்கல்பட்டு மாவட்ட தலைவர் சிங்கை ரகுராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தேசியக் கொடியை ஏற்றி, பேரணியைத் தொடங்கி வைத்தார்.
இந்த விழிப்புணர்வு பேரணி தாம்பரம் வித்யா திரையரங்கம் அருகில் இருந்து துவங்கி, முத்துரங்க முதலியார் சாலை வழியாகச் சென்று, சண்முகம் சாலையில் நிறைவடைந்தது.

போதைப்பொருள் பழக்கத்தால் சமூகம் எதிர்கொள்ளும் பாதிப்புகளை உணர்த்தும் நோக்கில், இளைஞர்கள், மாணவர்கள், மற்றும் சமூகப் பிரமுகர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினர்.
இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மண்டல தலைவர்கள், அணி மற்றும் பிரிவு நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்றனர். மேலும் பல பள்ளிகளின் மாணவ, மாணவிகளும் ஒற்றுமை மற்றும் போதைவிலக்கு விழிப்புணர்வை வலியுறுத்தும் பலகைகள் ஏந்தி பேரணியில் கலந்துகொண்டனர்.

நாடு முழுவதும் ஒற்றுமை, ஒழுக்கம், மற்றும் நலனுக்காக பாடுபட்ட சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் சேவையை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இந்த “ஒற்றுமை யாத்திரை” தாம்பரத்தில் பெரும் மக்களின் ஆதரவுடன் சிறப்பாக நிறைவு பெற்றது.











; ?>)
; ?>)
; ?>)