• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

“சர்தார்” படம் கார்த்தி ரசிகர்களுக்கு தீபாவளி டரீட்

ByA.Tamilselvan

Oct 21, 2022

நடிகர் கார்த்தி நடித்துள்ள சர்தார் படம் வெளியாகியுள்ள நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடை, பட்டாசு கொண்டாட்டங்களோடு அந்த தினத்தில் ரிலீசாகும் புதுப்படங்களும் அதிக கவனம் பெறும். அந்த வகையில் இந்த தீபாவளிக்கு இரண்டு புதிய படங்கள் ரிலீசாகியுள்ளது. ஒன்று சிவகார்த்திகேயன் நடித்த ப்ரின்ஸ், மற்றொன்று கார்த்தி நடித்த சர்தார்.
படத்தில் கார்த்தி 15 கெட்டப்புகளில் நடித்திருக்கும் நிலையில் படப்பிடிப்பு 150 லொக்கேஷன்களில் எடுக்கப்பட்டு இருக்கிறது.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்தார் படத்தில் ஹீரோயினாக ராஷி கண்ணா நடிக்க லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ரெஜிஷா விஜயன், முனீஷ்காந்த், அவினாஷ், மாஸ்டர் ரித்விக், யூகி சேது, முரளி சர்மா, வில்லனாக மிரட்ட பாலிவுட் நடிகர் சங்கி பாண்டே ஆகியோரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
இந்த படம் மக்களுக்கான புதிய சோஷியல் மெசேஜ். தந்தை,மகன் என இரு வேடங்களிலும் கார்த்தி கலக்கி இருக்கிறார்.படம் ஆரம்பித்த 10 நிமிடத்தில் இருந்தே படம் சூடுபிடிக்க ஆரம்பிக்க இடைவேளை காட்சியில் சர்தார்(கார்த்தி) தெறிக்க விடுகிறார். லைலா அற்புதமாக நடித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசை ரசிகர்களை மிரட்டியுள்ளது. மொத்தத்தில் இப்படம் கார்த்தி ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்தான்.