• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சஞ்சய் ராவத் ஜாமீனில் விடுதலை!

ByA.Tamilselvan

Nov 10, 2022

பத்ராசால் மோசடி வழக்கில் சஞ்சய் ராவத் எம்.பி. ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள பத்ரா சால் குடியிருப்பு சீரமைப் பில் மோசடி நடந்திருப்பதாக கூறி, சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ராவத் கடந்த ஜூலை 31 அன்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். மத்திய மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சஞ்சய் ராவத் மனு தாக்கல் செய்திருந்தார். இதன்மீதான விசாரணை கடந்த நவம்பர் 2-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு நவம்பர் 9-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி தேஷ் பாண்டே, புதனன்று தீர்ப்பு வழங்கினார். அப்போது, “சட்டவிரோத பணப் பரிமாற்ற புகாரில் எந்தவித முகாந்திரமும் இன்றி சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. சஞ்சய் ராவத்தின் உதவி யாளர் பிரவீன் ராவத் மீதான வழக்கு சிவில் தன்மை கொண்டது. குற்ற வழக்கு அல்ல. பொருளாதாரக் குற்றம் என்று கூறுவதால் அது குற்ற வழக்கு ஆகாது. காரணமே இன்றி அப்பாவி களை கைது செய்து துன்புறுத்து வதை ஏற்க முடியாது; எனவே, சஞ்சய் ராவத்திற்கு ஜாமீன் வழங்கப்படுகிறது” என்று உத்தரவு பிறப்பித்தார்.