• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவில் சந்தனக்கூடுவிழா

ByKalamegam Viswanathan

Feb 9, 2023

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவில் சந்தனக்கூடுவிழா விடிய விடிய வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது
விழாவின் முக்கிய நிகழ்வாக காலையில் 300 அடி மலை மேல் உள்ள தர்காவுக்கு சந்தன செம்பு எடுத்துச் செல்லப்பட்டடு ஹஜரத் சுல்தான் சிக்கந்தர் பாதுஷாவிற்கு (கபர்ஸ்தான்) சமாதிக்கு சந்தனம் பூசப்பட்டது. அனைத்து மக்களின் நன்மைக்காக சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.திருப்பரங்குன்றம் மலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஹஜ்ரத் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவில் ஆண்டுதோறும் ரஜப் பிறை மாதத்தில் சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டிற்கான சந்தனகூடு திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக சந்தனக்கூடுவிழா இரவு முழுவதும் நடைபெற்றது.
பின்னர் சந்தனக்கூடு பெரியரத வீதியில் உள்ள பள்ளிவாசல் வளாகத்தில் சுமார் 25 அடி உயரத்தில் மின்விளக்கு அலங்காரத்தில் சந்தனக்கூடு அலங்கரிக்கப்பட்ட நிலையில் செம்பில் வாசனை கமழும் சந்தனம் நிரப்பப்பட்டதை தொடர்ந்து சந்தனக்கூடு பள்ளிவாசல் வளாகத்தில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளில் சுற்றி வலம் வந்தது.


இதில் ஏராளமான இஸ்லாமியர்கள்கலந்துகொண்டனர்.சந்தனகூடு ஊர்வலத்தை தொடர்ந்து விடிய காலையில் 300 அடி மலை மேல் உள்ள தர்காவுக்கு சந்தன செம்பு எடுத்துச் செல்லப்பட்டடு ஹஜரத் சுல்தான் சிக்கந்தர் பாதுஷாவிற்கு சந்தனம் பூசப்பட்டது.அங்கு முஸ்லிம்கள் பாத்தியா ஓதி வழிபாடு செய்தனர்.
சந்தனக்கூடு நிகழ்ச்சி இரவு முழுவதும்விடிய, விடிய நடந்தது.திருவிழாவையொட்டி தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.விழாவினையொட்டி ஏராளாமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.