• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தமிழக ஆளுநர் குடும்பத்தினருடன் சாமி தரிசனம்

Byகுமார்

Dec 16, 2021

தென்மாவட்டங்களில் 4 நாள் சற்றுபயணம் மேற்கொண்டுள்ள தமிழக ஆளுநர் ஆர். என். ரவி நேற்று மதுரை வந்தார். இதனை தொடர்ந்து இன்று காலை உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு ஆளுநர் தனது குடும்பத்தாருடன் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்த தமிழக ஆளுநருக்கு கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஸ்சேகர் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் மற்றும் கோவில் அறங்காவலர் கருமுத்து கண்ணன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

கோவிலில் மூலவர், மீனாட்சி அம்பாள் சுந்தரேஸ்வரர் முக்குருணி விநாயகர் உள்ளிட்ட சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார். கோவில் உள்துறை அலுவலகத்தில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

ஆளுநர் வருகையை முன்னிட்டு கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பக்தர்களுக்கு அனுமதிக்கப்படவில்லை.

அதனைத் தொடர்ந்து 11 மணி அளவில் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.