வெஜிடபிள் சூப்:
தேவையான பொருள்கள்:-
கோஸ்-50 கிராம் பீன்ஸ்-50 கிராம் கேரட்-50 கிராம் சோளமாவு-3 ஸ்பூன் உப்பு-தேவையான அளவு வெண்ணெய்-1 ஸ்பூன் பட்டை-சிறிது லவங்கம்-சிறிது பிரியாணி இலை-சிறிதளவு மிளகு தூள்-2 ஸ்பூன் வெங்காயம்-1 தக்காளி-1 கொத்தமல்லி-சிறிதளவு.
செய்முறை:-
முதலில் ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் ஊற்றவும். வெண்ணெய் சூடானதும் அதில் பட்டை, லவங்கம், பிரியாணி இலை, வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வதங்கிய பிறகு கேரட்,பீன்ஸ்,கோஸ் போன்ற காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்கவும்.. காய் வெந்த பிறகு தேவையான அளவு மிளகு தூள் சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். சுவையான, சூடான, ஆரோக்கியமான வெஜிடபில் சூப் தயார். இறுதியில் சூப்பின் மேல் கொத்தமல்லி தூவி அழகாக அலங்கரித்துப் பரிமாறுங்கள்.
சமையல் குறிப்புகள்:
