• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து மணந்தார். நட்சத்திர ஜோடிகளாக வலம்வந்த இருவரும் அண்மையில் மனம் ஒத்து பிரிவதாக தங்ககளுடைய விவாகரத்தை அறிவித்தனர். இந்நிலையில் தன்னுடைய விவாகரத்து குறித்து பேட்டி ஒன்றில் சமந்தா பேசியுள்ளது வைரலாகி வருகிறது

கடந்த 2010 ஆம் ஆண்டு தெலுங்கு படம் ஒன்றில் இணைந்து நடித்ததன் மூலம், நண்பர்களாக பழக துவங்கிய சமந்தா, நாக சைதன்யா இருவரும் காதலிக்க துவங்கினார்கள். அதன்பின்னர் இவர்களது காதல் விவகாரம் வெளியே வர துவங்கியதும் இரு வீட்டார் சம்மதத்துடன் கோவாவில் மிக பிரமாண்டமாக, இவர்களுடைய திருமணம் கடந்த 2017 ஆம் ஆண்டு மிக நடந்தது.

திருமணத்திற்கு பின்னரும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாக தங்களின் விவாகரத்தை அறிவித்தனர். அதன் பின்னர் சமந்தா மீண்டும் படங்களில்நடிக்க தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தன்னுடைய விவாகரத்து பிரிவு குறித்து பேட்டி ஒன்றில் சமந்தா பேசியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதில், ஆரம்பத்தில் நான் மிகவும் பலவீனமானவள் என்று நினைத்தேன். விவாகரத்து பிரிவால், நான் நொறுங்கி இறந்துவிடுவேன் என்று நினைத்தேன். நான் இவ்வளவு வலிமையானவளாக இருக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை . இன்று நான் எவ்வளவு வலிமையாக இருக்கிறேன் என்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஏனென்றால் நான் இவ்வளவு வலிமையுடையவள் என்பது இதற்கு முன் எனக்கு தெரியாது. இவ்வாறு அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் சமந்தா.