• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சமந்தா, கீர்த்தி-ன்னா கொஞ்சம் பயம் – திரிஷா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வனின் குந்தவை பிராட்டி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கர்ஜனை, ராங்கி உள்ளிட்ட படங்களிலும் நடித்து வரும் திரிஷா சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷை பார்த்து கொஞ்சம் பயந்ததாக கூறியுள்ளார்.

பிரசாந்த், சிம்ரன் ஜோடியாக நடித்த ஜோடி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை திரிஷா அதன்பிறகு மௌனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, லேசா லேசா, மனசெல்லாம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த திரிஷாவுக்கு விக்ரமின் சாமி திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதை தொடர்ந்து தமிழ்,தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் அஜித், விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தார்..

மீண்டும் 96 திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். சினிமாவில் சக போட்டியாளராக வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் தனக்கு போட்டியாக சினிமாவில் கலக்கி கொண்டுள்ளதை பார்த்து 3, 4 வருடங்களுக்கு சற்று பயந்ததாகவும். ஆனால் இப்பொழுது அனைவரும் நண்பர்களாக பழகி வருவதாகவும் ஒருவருக்கொருவர் பரஸ்பரமாக பேசிக் கொள்வதாகவும் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.