• Mon. Jan 5th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

”அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா எனது படத்தில் அறிமுகமானதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று உற்சாகமுடன் தெரிவித்திருக்கிறார் நடிகை சமந்தா.

‘ருத்ரமாதேவி’ படத்தை இயக்கிய தெலுங்கின் பிரபல இயக்குநர் குணசேகர், மகாபாரத கதையை அடிப்படையாகக் கொண்டு ‘சகுந்தலம்’ படத்தை இயக்கி வருகிறார். நடிகை சமந்தா தெலுங்கில் ‘சகுந்தலம்’ படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார்.

முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் அல்லு அர்ஹா இந்தப்படத்திற்காக 10 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அல்லு அர்ஹா நடித்தது குறித்து நடிகை சமந்தா அளித்துள்ளப் பேட்டியில், “தெலுங்கு மொழியை பிரமாதமாக பேசுகிறாள். படப்பிடிப்பில் 300-க்கும் மேற்பட்டோர் இருந்தபோதும் அல்லு அர்ஹா பயப்படடாமல் தன்னம்பிக்கையுடன் நடித்தால். என்னுடைய படத்தில் அறிமுகமாவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால், பல வருடங்கள் கழித்து அவள் சினிமாவை உலுக்கப்போகிறாள். அவள் ஒரு ராக்ஸ்டாராக பிறந்தவள். படத்தைப் பார்த்துவிட்டு நீங்கள் என்னுடன் உடன்படுவீர்கள்” என்று கூறியிருக்கிறார்.