காளிதாஸ் எழுதிய புராண கதையான சகுந்தலம் என்ற திரைப்படத்தில் காவிய நாயகி வேடத்தில் சமந்தா நடித்துள்ளார்.
தென்னிந்தியாவின் சூப்பர் குயினாக வலம் வருபவர் சமந்தா. அவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘சகுந்தலம்’. இந்த படத்தில் காவிய நாயகியாக சகுந்தலை கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார். காளிதாஸ் எழுதிய புராண கதையான சகுந்தலத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. அதாவது மகாபாரதத்தில் விசுவாமித்திர முனிவருக்கும், மேனகைக்கும் பிறந்தவள் சகுந்தலை. கணவரை பிரியும் சகுந்தலை எவ்வாறு மீண்டும் இணைகிறார் என்பது படத்தின் கதை.
‘ருத்ரமா தேவி’ உள்ளிட்ட புகழ்பெற்ற காவியப் படங்களை இயக்கிய குணசேகரன் இப்படத்தை இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக இப்படம் வெளியாகவிருக்கிறது. மலையாள நடிகர் தேவ் மோகன், துஷ்யந்த் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் மோகன்பாபு, கௌதமி, ஈஷார் ரெப்பா உள்ளிடடோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதுதவிர அல்லு அர்ஜூனின் மகள் அல்லு அர்ஹா குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
இந்த படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சகுந்தலை கதாபாத்திரத்தில் நடித்துள்ள சமந்தாவின் அழகான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களை கவர்ந்துள்ளது.